உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / மணப்பெண் கெட்டப்பில் பிக்பாஸ் ஜூலி

மணப்பெண் கெட்டப்பில் பிக்பாஸ் ஜூலி

பிக்பாஸ் ஜூலி சொல்லியடித்தது போல் பிக்பாஸின் முந்தைய சீசனில் தவறவிட்ட தனது பெயரை பிக்பாஸ் அல்டிமேட் சீசனில் மீட்டு அனைவருக்கும் பிடித்தமான நபராக மாறிவிட்டார். ஜூலியை தவறாக பேசியவர்கள் கூட தற்போது அவருக்கு ரசிகர்களாக மாறிவிட்டனர். சினிமாவில் நடிப்பதற்காக முயற்சி செய்து வரும் ஜூலிக்கு தற்போது வரை எந்த ப்ராஜெக்ட்டும் பெரிதாக அமையவில்லை. இதற்கிடையில் அவர் மணப்பெண் கோலத்தில் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகவே ரசிகர்கள் அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். ஆனால், உண்மையில் ஜூலிக்கு திருமணம் எதுவும் நடைபெறவில்லை. ஜூலி சமீபத்தில் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் 'தவமாய் தவமிருந்து' என்கிற தொடரில் கெஸ்ட் ரோலில் நடித்து வருகிறார். அதில் அவருக்கு திருமணம் நடைபெறுவது போன்ற காட்சி படமாக்கப்பட்டது. அப்போது போடப்பட்ட மணப்பெண் கெட்டப்பில் தான் ஜூலி ஜாலியாக போஸ் கொடுத்துள்ளார். இந்த உண்மையை தெரிந்து கொண்ட ஜூலியின் ரசிகர்கள் 'அப்பாடா' என நிம்மதி பெருமூச்சுவிட்டு வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !