யோகா மையத்தில் தமன்னா பெற்ற ஆன்மிக அனுபவம்
ADDED : 1234 days ago
விஷாலின் ஆக்சன் படத்திற்கு பிறகு தமிழில் புதிய படங்கள் இல்லாத நிலையில், தெலுங்கு, ஹிந்தியில் தொடர்ந்து நடித்து வருகிறார் தமன்னா. அதோடு வெப் சீரியல்களிலும் நடிக்கிறார். இந்த நிலையில் ஈசா யோகா மையத்திற்கு சென்றபோது தான் பெற்ற அனுபவத்தை ஒரு வீடியோவாக இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இருக்கிறார் தமன்னா. அந்த வீடியோவில், ஈஷா யோகா மையத்தில் இருந்த மிக அழகான மூன்று நாட்களை இன்னும் கடந்து வருகிறேன். சாம்பவி கிரியாவை கற்றுக்கொள்ள விரும்புவதிலிருந்து இந்த உலகம் எவ்வளவு ஆச்சரியமாக உள்ளது என்பதை அனுபவிக்கிறேன். ஒவ்வொரு தருணமும் புத்துயிர் பெற்றேன். ஏராளமான ஆரோக்கிய நலன்கள் மற்றும் எனது ஆன்மிக பயணத்தை தொடங்கக்கூடிய ஒரு கிரியாவில் துவங்கியதை பாக்கியமாக உணர்கிறேன் என்று தெரிவித்து இருக்கிறார் தமன்னா.