புதிய காதலியுடன் டேட்டிங் செய்யும் விஷால்!
ADDED : 1185 days ago
லத்தி படத்தில் நடித்து வந்தபோது காயமடைந்த விஷால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வருகிறார். இந்நிலையில் அவர் அளித்த ஒரு பேட்டியில், ஒரு பெண்ணை தான் காதலிப்பதாகவும் அவருடன் டேட்டிங் செய்து வருவதாகவும் தெரிவித்துள்ள விஷால், விரைவில் எனது காதலியை உலகுக்கு வெளிப்படுத்துவேன் என்றும் கூறியிருக்கிறார். அதோடு 2019 அனிஷா ரெட்டி என்ற பெண்ணுடன் நிச்சயதார்த்தம் நடந்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக அந்த திருமணம் தடைபட்டதால், நிச்சயிக்கப்பட்ட திருமணங்களில் தனக்கு நம்பிக்கை இல்லை என்று தெரிவித்துள்ள விஷால், காதல் திருமணத்தில் தனக்கு நம்பிக்கை இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.