தனுஷ், சிம்பு மீது ஆசைப்படும் தெலுங்கு நடிகை
தமிழை விட தெலுங்கில் நிறைய புதுமுக நாயகிகள், வளரும் நாயகிகள் இருக்கிறார்கள். அவர்களில் பலருக்கும் தமிழ் சினிமாவில் நடிக்க வேண்டும் என்பது ஆசை. கடந்த இரண்டு வருடங்களாக கொரானோ தாக்கத்தால் பல புதிய படங்கள் ஆரம்பிக்காத நிலையில் அறிமுக நடிகைகள் வருவதும் குறைந்துள்ளது.
தெலுங்கில், “டாக்சிவாலா, திம்மருசு, எஸ்ஆர் கல்யாண மண்டபம், கமனம்” ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்தவர் பிரியங்கா ஜவல்கர். பேஷன் டிசைனிங் படித்து முடித்து பின்னர் அமெரிக்கா சென்று வேலை பார்த்து வந்தவர். சமூக வலைத்தளத்தில் அவருடைய புகைப்படங்களைப் பார்த்து நடிக்க அழைத்து தெலுங்கில் சில படங்களில் நடித்துவிட்டார்.
சமீபத்தில் தனது ரசிகர்களுடன் சமூக வலைத்தளத்தில் சாட் செய்த பிரியங்காவிடம் ஒரு ரசிகர், “கோலிவுட்டில் உங்களுக்கு யார் மீது ஆசை” எனக் கேட்டதற்கு, “எப்போதுமே தனுஷ், இப்போது சிம்புவையும் சில காரணங்களுக்காகக் பிடிக்க ஆரம்பித்திருக்கிறது. இருவருமே அழகானவர்கள்,” என்று பதிலளித்திருக்கிறார்.
தங்களைப் பிடிக்கும் எனச் சொன்ன பிரியங்காவிற்கு தனுஷ், சிம்பு இருவரில் யார் நடிக்க வாய்ப்பு கொடுக்கப் போகிறார்கள்?.