மும்பையில் பாலிவுட் நடிகை மலைகா அரோராவை சந்தித்த நயன்தாரா - விக்னேஷ் சிவன்
ADDED : 1183 days ago
கடந்த மாதம் திருமணம் செய்து கொண்ட நயன்தாராவும் விக்னேஷ் சிவனும், ஹனிமூன் சென்று திரும்பினார்கள். தற்போது அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடித்து வரும் ஜவான் படத்தில் நடித்து வருகிறார் நயன்தாரா. அவருடன் விக்னேஷ் சிவனும் மும்பை சென்றுள்ளார். இந்த நிலையில் ஹிந்தி சினிமாவின் கவர்ச்சி நடிகை மலைகா அரோராவை, நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் நேரில் சந்தித்துள்ளார்கள். அப்போது அவர்கள் எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்று இணையதளத்தில் வைரலாகி வருகிறது. மேலும் 48 வயதான இந்த மலைகா அரோரா, தயாரிப்பாளர் போனி கபூரின் மகனும் நடிகருமான 37 வயது அர்ஜுன் கபூரை காதலித்து வருவதோடு அவர்கள் இருவரும் லிவிங் டுகெதர் முறையில் வாழ்ந்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.