செல்போன் மூலம் இனி புதிய திரைப்படங்கள் பார்க்கலாம்
ADDED : 1228 days ago
எம்.டி.எம் எனப்படும் ‛மூவி டு மொபைல்' என்ற இலவச செயலியை இயக்குனரும் தயாரிப்பாளருமான விஜயசேகரன் உருவாக்கியுள்ளார். இதன் துவக்க விழாவில் தயாரிப்பாளர் சங்க தலைவர் முரளி ராமசாமி, ராஜன், ராதாகிருஷ்ணன், இமான் அண்ணாச்சி ஆகியோர் கலந்து கொண்டனர். ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வெளியாகாமல் நிலுவையில் உள்ள நிலையில் இந்த எம்.டி.எம் செயலி மூலமாக விரைவில் படத்தை வெளியிடும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இச்செயலி வழியாக வண்டி தள்ளுபவர் முதல் வட்டி கடைக்காரர் வரை இனி அனைவரும் செல்போனில் படம் பார்க்கலாம் என தெரிவித்தனர். தற்போது இச்செயலி வழியாக முதல் படமாக ‛பெஸ்டி' படம் வெளியாகிறது. இதனைத்தொடர்ந்து குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம், வாழ்க விவசாயி உட்பட பல படங்கள் ஜூலை 13 தேதி முதல் வெளியாக உள்ளது.