கிருத்திகா உதயநிதியின் ‛பேப்பர் ராக்கெட்' டிரைலர் வெளியீடு
ADDED : 1173 days ago
2013ம் ஆண்டு சிவா, பிரியா ஆனந்த் நடித்த வணக்கம் சென்னை என்ற படத்தை இயக்கிய கிருத்திகா உதயநிதி அதையடுத்து விஜய் ஆண்டனி நடித்த காளி என்ற படத்தை இயக்குனர். இந்த நிலையில் தற்போது பேப்பர் ராக்கெட் என்ற பெயரில் ஒரு வெப்சிரிஸை அவர் இயக்கி இருக்கிறார். இதில் காளிதாஸ் ஜெயராம், தன்யா ரவிச்சந்திரன், பூர்ணிமா பாக்யராஜ், கருணாகரன், காளி வெங்கட் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். ஜூலை 29ம் தேதி ஜீ 5 ஓடிடி தளத்தில் வெளியாகும் இந்த வெப் சிரிஸின் டிரைலர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த டிரைலர் சாலை பயணத்தை வைத்து ஆறு பேரின் தனிப்பட்ட சவால்களை சுற்றிய கதையில் நகர்கிறது. இந்த வெப் சீரிஸ் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் வெளியாகிறது.