நடிகர் அர்ஜுனின் தாயார் மறைவு
ADDED : 1168 days ago
பிரண்ட்ஷிப் படத்திற்கு பிறகு தற்போது மேதாவி என்ற படத்தில் நடித்து வரும் அர்ஜுன், மலையாளம் , தெலுங்கு, கன்னட படங்களிலும் பரவலாக நடித்து வருகிறார். இந்த நிலையில் இன்று பெங்களூரில் அர்ஜுனின் தாயார் லட்சுமி தேவி உடல் நலக்குறைவால் காலமானார். 85 வயதான லட்சுமி தேவி உடல்நலம் பாதிக்கப்பட்டு பெங்களூர் ஜெயா நகர் நகரில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் காலமாகி இருக்கிறார்.
இதையடுத்து பெங்களூரில் உள்ள அர்ஜுனின் சொந்த ஊரான மதுகிரி அருகில் உள்ள ஜக்குநல்லியில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அதே ஊரில் அவர்களது தோட்டத்தில் உள்ள அர்ஜுனின் அப்பாவின் நினைவிடம் அருகே நாளை நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.