உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ரஜினியின் ஜெயிலர் படப்பிடிப்பு தள்ளிப் போகிறதா?

ரஜினியின் ஜெயிலர் படப்பிடிப்பு தள்ளிப் போகிறதா?

அண்ணாத்த படத்தை அடுத்து நெல்சன் இயக்கும் ஜெயிலர் படத்தில் நடிக்கிறார் ரஜினிகாந்த். அனிருத் இசையமைக்கும் இந்த படத்தில் ரஜினியுடன் ஐஸ்வர்யா ராய், சிவராஜ் குமார், ரம்யா கிருஷ்ணன், பிரியங்கா மோகன், யோகி பாபு உள்பட பலர் நடிக்கிறார்கள். இந்த படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் அடுத்த மாதம் தொடங்க இருப்பதாக செய்திகள் வெளியாகி வந்தன. ஆனால் தற்போது ரஜினியின் ஜெயிலர் படத்துக்காக ஐதராபாத் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் போடப்பட்டு வரும் பிரமாண்ட ஜெயில் செட் அமைக்கும் பணிகள் முடிவடைய தாமதமாகி வருகிறதாம். அதனால் அடுத்த மாதத்தில் பூஜை நடத்திவிட்டு அதற்கு அடுத்த மாதம் செப்டம்பரில் படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !