ஜீ தமிழின் சண்டே ஸ்பெஷல் : நாகார்ஜுனாவின் தங்கராஜா
ADDED : 1204 days ago
ஜீ தமிழின் சூப்பர் சண்டே பொனான்ஸாவில், ஒவ்வொரு வார இறுதியில் அற்புதமான கதைகளுடன் நேயர்களை மகிழ்விக்க திரைப்படங்களை ஒளிபரப்புகிறது. இந்த ஞாயிற்றுக்கிழமை ஆகஸ்ட் 7ம் தேதி மாலை 5 மணிக்கு தங்கராஜா என்ற படத்தை ஜீ தமிழில் ஒளிபரப்ப உள்ளது.
கல்யாண் கிருஷ்ணாவின் இயக்கம் மற்றும், நாகார்ஜுனா, ரம்யா கிருஷ்ணன், நாக சைதன்யா, கீர்த்தி ஷெட்டி ஆகியோரின் நடிப்பு, மயக்கும் இசை மற்றும் வசீகரிக்கும் கதைக்களம் பார்வையாளர்களை நிச்சயம் ஈர்க்கும். நகைச்சுவை, காதல் மற்றும் அதைத் தொடர்ந்து வரும் நிகழ்வுகள் நிச்சயமாக அனைவரையும் கவர்ந்திழுக்கும். அமானுஷ்ய குடும்ப திரைப்படம் ரசிக்க ஜீ தமிழில் தங்கராஜா படத்தை காண தவறாதீர்கள்.