தனுஷின் திருச்சிற்றம்பலம் டிரைலர் நாளை வெளியீடு
ADDED : 1204 days ago
மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் திருச்சிற்றம்பலம். நித்யா மேனன், பிரியா பவானி சங்கர், ராஷி கண்ணா, பாரதி ராஜா, பிரகாஷ் ராஜ் ஆகியோர் நடித்துள்ளனர். 7 ஆண்டுகளுக்குப் பிறகு தனுஷ் படத்திற்கு அனிரூத் இசையமைக்கிறார். இந்த படத்தின் இறுதிக்கட்ட தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்படம் ஆகஸ்ட் 18ம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்தில் தனுஷ் டெலிவரி பாய் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மிகவும் எதிர்பார்ப்பிற்குறிய இப்படத்தின் டிரைலர் நாளை(ஆக., 7) மாலை 7 மணிக்கு வெளியாக இருப்பதாக படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர் .