வெந்து தணிந்தது காடு 2வது பாடல் ஆக.,14ல் வெளியாகிறது
ADDED : 1168 days ago
கவுதம் மேனன் இயக்கத்தில் விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா படங்களைத் தொடர்ந்து சிம்பு நடித்துள்ள படம் வெந்து தணிந்தது காடு. ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ள இந்த படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக சித்தி இத்னானி நடிக்க, ராதிகா சரத்குமார் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். வேல்ஸ் இன்டர்நேஷனல் தயாரித்துள்ள இந்த படத்தை உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் செப்டம்பர் 15ம் தேதி வெளியிடுகிறது. இப்படத்தின் முதல் பாடல் ஏற்கனவே வெளியாகி விட்ட நிலையில் தற்போது இரண்டாவது பாடல் மறக்குமா நெஞ்சம் என்ற பாடலை ஆகஸ்ட் 14ம் தேதி மாலை 6 மணி 21 நிமிடத்திற்கு வெளியாக இருப்பதாக படநிறுவனம் அறிவித்திருக்கிறது .