செப்.,2ல் வருகிறது அரவிந்தசாமியின் ரெண்டகம்
ADDED : 1150 days ago
தலைவி படத்தை அடுத்து கள்ளபார்ட், வணங்காமுடி, ரெண்டகம், சதுரங்க வேட்டை -2, நரகாசுரன் என அரவிந்த்சாமி நடிப்பில் பல படங்கள் திரைக்கு வர தயாராகிக் கொண்டிருக்கின்றன. இதில் தமிழ், மலையாளம் என இரண்டு மொழிகளில் அவர் நடித்துள்ள ரெண்டகம் படம் செப்டம்பர் 2ம் தேதி திரைக்கு வருவதை படக்குழு அறிவித்திருக்கிறது. பெல்லினி என்பவர் இயக்கி உள்ள இந்த ரெண்டகம் படத்தில் அரவிந்த்சாமியுடன் குஞ்சாபோகோபன், ஜாக்கி ஷெராப் உட்பட பலர் முக்கிய இடங்களில் நடிக்க, அருள்ராஜ் கென்னடி இசையமைத்திருக்கிறார். தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வரும் ரெண்டகம் படத்தின் மோஷன் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.