உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சிவாஜி 2வுக்கு வாய்ப்பு இருக்கிறது

சிவாஜி 2வுக்கு வாய்ப்பு இருக்கிறது

கடந்த 2007ம் வருடம் ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகிய மிகப்பெரிய வெற்றியை பெற்ற படம் சிவாஜி தி பாஸ். இந்த படம் வசூல் ரீதியாக பல வித சாதனைகளை செய்ததோடு தமிழ் சினிமாவை இந்திய அளவில் அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றது. இந்த படத்திற்கு கிடைத்த வரவேற்பு காரணமாக கடந்த சில வருடங்களுக்கு முன்பு இந்த படம் 3-டிக்கு மாற்றப்பட்டு மீண்டும் திரையிடப்பட்டது.

பிரம்மாண்ட வெற்றி படங்களுக்கு இரண்டாம் பாகம் உருவாகி வரும் நிலையில் சிவாஜி படத்திற்கும் இரண்டாம் பாகம் உருவானால் நன்றாக இருக்கும் என ரசிகர்கள் பலர் தொடர்ந்து தங்களது விருப்பத்தை வெளிப்படுத்தி வந்தனர்.

இந்த நிலையில் இந்த படத்தை தயாரித்த ஏவிஎம் நிறுவனம் சார்பில் அதன் தயாரிப்பாளர்களில் ஒருவரான அருணா குகன், தற்போது சிவாஜி படத்திற்கு இரண்டாம் பாக உருவாக வாய்ப்பு இருக்கிறது என்றும் ஆனால் அதற்கான சரியான கதை அமைய வேண்டும் என்றும் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !