பாடலாசிரியர் கபிலன் மகள் துாரிகை தற்கொலை
ADDED : 1236 days ago
பிரபல திரைப்பட பாடலாசிரியர் கபிலனின் மகள் தூரிகை, வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கபிலனின் மகள் தூரிகை ஆடை வடிவமைப்பாளராகவும், எழுத்தாளராகவும் இருந்து வந்தார். இவர் 'Being Women Magazine' எனும் இதழையும், 'The Label Keera' எனும் ஆடை வடிவமைப்பகத்தையும் நடத்தி வந்தார். இந்நிலையில், அவர் சற்று தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
தூரிகையின் உடல் சாலிகிராமம் தனியார் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இந்த தற்கொலைச் சம்பவம் தொடர்பாகவும், தற்கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்தும் சென்னை அரும்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.