டிரிகர் டிரைலர் வெளியீடு : ஆக் ஷனில் அசத்தும் அதர்வா
ADDED : 1205 days ago
100 படத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து நடிகர் அதர்வா, இயக்குனர் சான் ஆண்டன் கூட்டணியில் உருவாகி உள்ள படம் ‛டிரிகர்'. தன்யா ரவிச்சந்திரன், அருண்பாண்டியன், சீதா, அழகம் பெருமாள் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது. குழந்தை கடத்தல் பின்னணியில் நடக்கும் கிரைம் சம்பவங்களை மையப்படுத்தி அதிரடி ஆக் ஷன் கதைக்களத்தில் இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது. அதர்வா அண்டர் கவர் போலீஸ் வேடத்தில் நடித்திருக்கிறார். டிரைலர் முழுக்கவே ஒரே அதிரடி ஆக் ஷன் களமாக உள்ளது. சென்சாரில் யுஏ சான்று பெற்றுள்ள இந்தபடம் இம்மாதம் திரைக்கு வர உள்ளது.