உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஓடிடியில் நேரடியாக வெளியான த்வனி, தூண்டுதல்

ஓடிடியில் நேரடியாக வெளியான த்வனி, தூண்டுதல்

புதுமுகங்கள் இணைந்து உருவாக்கி உள்ள படம் த்வனி. அனில் குமார் தயாரித்துள்ள இந்த படத்தை எஸ்.ஆர்.பாலாஜி இயக்கி உள்ளார். இதில் புதுமுகங்களான பிரியங்கா, வருண், சுதாகர் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். அகில் ஒளிப்பதிவு செய்துள்ளார், பிரவீன் இசை அமைத்துள்ளார், இது ஒரு மியூசிக்கல் த்ரில்லர் படம்.

ராஜேஷ் என்பவர் இயக்கி இருக்கும் படம் தூண்டுதல். சக்தி ராமசாமி தயாரித்துள்ளார். ஜார்ஜ் விஜய் மற்றும் ஆர்த்தி அஸ்வின் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். ரகுராம் ஒளிப்பதிவு செய்துள்ளார். இன்றைய காலத்தில் கைபேசியினால் இளம் பெண்கள் அடையும் பாதிப்பை சொல்லியிருக்கும் படம். இந்த இரண்டு படங்களும் மூவிவுட் என்ற புதிய ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !