சேரன் நடிக்கும் புதிய படம்
ADDED : 1119 days ago
கடந்த 7 ஆண்டுகளாக சேரன் சினிமாவில் பெரியளவில் படங்கள் பண்ணவில்லை. கடந்த ஆண்டு ஆனந்தம் விளையாடும் வீடு படத்தில் நடித்தார். இந்த ஆண்டு 'தமிழ்குடிமகன்' என்ற படத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தை இசக்கி கார்வண்ணன் டைரக்டு செய்கிறார். லட்சுமி கிரியேஷன்ஸ் தயாரிக்கிறது.
ஸ்ரீபிரியங்கா, லால், வேல.ராமமூர்த்தி, ரவிமரியா, எஸ்.ஏ.சந்திரேசகர் உள்பட பலர் நடிக்கிறார்கள். இது ஒரு மனிதனின் குடியுரிமையை பற்றிய படம். தாழ்த்தப்பட்டவர்களின் உரிமைகள் குறித்தும், சமுதாய சமநிலை பற்றியும் இந்தப் படம் பேசும். இதுவரை யாரும் கூறாத, வித்தியாசமான கோணத்தில் படம் இருக்கும்” என்கிறார், இயக்குனர் இசக்கி கார்வண்ணன்.