தர்ஷா குப்தாவின் அடுத்த அதிரடி போட்டோ சூட்
ADDED : 1113 days ago
விஜய் டிவியில் வெளியான செந்தூரப்பூவே என்ற சீரியலில் நடித்து பிரபலமானவர் தர்ஷா குப்தா. பின்னர் குக் வித் கோமாளி நிகழ்ச்சி இரண்டாவது சீசனில் கலந்து கொண்டார். அதன்பிறகு ருத்ர தாண்டவம் படத்தில் நடித்தவர் தற்போது ஓ மை கோஸ்ட் உள்பட்ட சில படங்களில் நடித்து வருகிறார். இவர் தனது இன்ஸ்டாவில் தொடர்ந்து அதிரடியான கிளாமர் புகைப்படங்களை வெளியிடுவதை வாடிக்கையாக வைத்திருக்கிறார். சில தினங்களுக்கு முன்பு ராம்யா பாண்டியன் கருப்பு நிறத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டார். அவரை தொடர்ந்து தற்போது தர்ஷா குப்தாவும் ஒரு போட்டோ சூட் நடத்தி தெறிக்கவிடும் கிளாமர் போட்டோக்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்களும் ரம்யா பாண்டியனின் புகைப்படத்தை போன்று பெரிய அளவில் வைரலாகி வருகிறது.