மேலும் செய்திகள்
டிச.,5ல் ரிலீசாகும் பாலகிருஷ்ணாவின் 'அகண்டா 2: தாண்டவம்'
1106 days ago
ஜாவா சுந்தரேசன் ஆக மாறிய சாம்ஸ்
1106 days ago
மூக்குத்தி அம்மன்-2 பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியீடு
1106 days ago
விஜய் படத்தின் ஒரு அப்டேட் வந்தாலோ, அஜித் படத்தின் ஒரு அப்டேட் வந்தாலோ இருவரது ரசிகர்களும் சமூக வலைத்தளங்களில் சண்டையை ஆரம்பிப்பது வழக்கம். நேற்று அஜித் நடித்து வரும் 'துணிவு' படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியானது. உடனடியாக இருவரது ரசிகர்களும் பல 'டேட்டா'க்களை அள்ளிவிட்டு சண்டையிட்டுக் கொள்கிறார்கள்.
விஜய் நடிப்பில் வெளிவந்த 'பீஸ்ட்' படத்தின் முதல் பார்வை போஸ்டர் ஒரு நிமிடத்தில் புரிந்த சாதனையை 'துணிவு' படத்தின் முதல் பார்வை 9 நிமிடத்தில் தான் தொட்டது என நிமிடக் கணக்கில் எல்லாம் சண்டையிட ஆரம்பித்துவிட்டார்கள்.
'துணிவு' படம் வெளியாகும் வரை அது பற்றி அப்டேட்கள் தொடர்ந்து வந்து கொண்டேயிருக்கும். விஜய் நடிப்பில் உருவாகி வரும் 'வாரிசு' படம் பற்றியும் அப்டேட்கள் வர உள்ளன. இதனால், இரண்டு படங்களும் வெளியாகும் வரை விதவிதமான 'டேட்டா' சண்டைகளை சமூக வலைத்தளங்களில் பார்க்கலாம்.
அந்த சண்டைகள் அத்துமீறி போகாமல் இருக்க தங்களது ரசிகர்களுக்கு இருவருமே வேண்டுகோள் வைத்தால் நல்லது. அப்போதுதான் சமூக வலைத்தளங்கள் பக்கம் கொஞ்சம் எட்டிப் பார்க்க முடியும்.
1106 days ago
1106 days ago
1106 days ago