பாரதிராஜா மீண்டும் மருத்துவமனையில் அனுமதி
ADDED : 1113 days ago
இயக்குனர் பாரதிராஜாவுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு கடந்த மாதம் 24ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு நீர்சத்து குறைபாடு, நுரையீரல் சளி பிரச்சினைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இரண்டு வாரங்கள் வரை மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அவர் அதில் பூரண குணமாகி வீடு திரும்பினார். கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள வீட்டில் அவர் ஓய்வெடுத்து வந்தார்.
இந்த நிலையில் பாரதிராஜாவுக்கு நேற்று மீண்டும் உடல்நல குறைவு ஏற்பட்டு உள்ளது. ஏற்கெனவே அவர் சிகிச்சை பெற்ற அமைந்தகரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டிருப்பதாகவும், பெரிதாக கவலைப்பட எதுவும் இல்லை என்றும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கிறது.