யாதும் ஊரே யாவரும் கேளீர் டிசம்பரில் ரிலீஸ்
ADDED : 1154 days ago
வெங்கட கிருஷ்ணன் ரோக்நாத் இயக்கத்தில் விஜய் சேதுபதி, மேகா ஆகாஷ், மகிழ் திருமேனி, உள்பட பலர் நடிப்பில் உருவான படம் யாதும் ஊரே யாவரும் கேளீர். நிவாஸ் பிரசன்னா இந்த படத்திற்கு இசையமைத்து இருக்கிறார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே ரிலீசுக்கு தயாராகிவிட்ட இந்த படத்தின் ரிலீஸ் சில பிரச்னைகளால் காலதாமதமாகி வந்தது. இந்த நிலையில் தற்போது டிசம்பர் மாதத்தில் யாதும் ஊரே யாவரும் கேளீர் படம் வெளியாக இருப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வ தகவலை வெளியிட்டுள்ளது. என்றாலும் டிசம்பரில் எந்த தேதியில் அப்படம் வெளியாக உள்ளது என்ற விவரம் அந்த போஸ்டரில் தெரிவிக்கப்படவில்லை.