வைரலாகும் ரஜினியின் கேஷூவல் கிளிக்
ADDED : 1097 days ago
நடிகர் ரஜினிகாந்த் தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கும் ‛ஜெயிலர்' படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு சென்னையில் நடந்து வருகிறது. இந்நிலையில் ரஜினி வீட்டில் கேஷூவலாக அலைப்பேசியை பார்த்தபடி இருக்கும் ஒரு போட்டோவை பகிர்ந்துள்ளார் அவரது மகளும், இயக்குனருமான ஐஸ்வர்யா.
அதோடு, ‛‛இந்த போட்டோவிற்கு பில்டர் எடிட் தேவையில்லை. ஒருபோதும் தவறான கோணத்தில் இருக்க முடியாத முகம். விலைமதிப்பற்ற நேர்மறையான ஒரு போட்டோ. அப்பாவின் அன்பு. உங்கள் எல்லா நாட்களும் மேற்கண்ட வரியில் கூறப்பட்டுள்ளபடியே இருக்கும் என்று நம்புகிறேன். அனைவருக்கும் விஜயதசமி வாழ்த்துகள்'' என தெரிவித்துள்ளார்.
ரஜினியின் இந்த லேட்டஸ்ட் புகைப்படம் ரசிகர்களிடம் வைரலாக பரவி வருகிறது.