தீபாவளிக்கு ஓடிடியில் வெளியாகும் வெந்து தணிந்தது காடு!
ADDED : 1096 days ago
கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்த 'வெந்து தணிந்தது காடு' படம் கடந்த செப்டம்பர் 15ம் தேதி வெளியானது. வேல்ஸ் இன்டர்நேஷ்னல் பிலிம்ஸ் நிறுவனம் சார்பாக ஐசரி கணேஷ் தயாரித்த இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இப்படத்தில் சிம்புக்கு ஜோடியாக சித்தி இத்னானி நடித்திருந்தார்.
இப்படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல விமர்சனங்களை பெற்றுள்ளது. இந்நிலையில் இப்படம் பிரபல ஓடிடியான அமேசான் ப்ரைமில் வரும் தீபாவளியொட்டி வெளியாகவுள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது.