ஹிப்ஹாப் ஆதியின் 'வீரன்' படப்பிடிப்பு நிறைவு
ADDED : 1195 days ago
பிரபல இசையமைப்பாளராகவும், நடிகராகவும் இருப்பவர் ஹிப்ஹாப் ஆதி. நடிகராக பல படங்களில் நடித்துவருகிறார் . 'அன்பறிவு', 'சிவக்குமாரின் சபதம்' ஆகிய படங்களுக்கு பிறகு தற்போது 'வீரன்' படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை இயக்குனர் ஏ.ஆர்.சரவணன் இயக்கி வருகிறார்.
ஆக்ஷன் காமெடி படமாக உருவாகும் இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் சார்பில் டிஜி தியாகராஜன் தயாரித்து வருகிறார். ஆதியே இப்படத்திற்கு இசையமைத்து வருகிறார் .இந்த படத்தில் ஆதிரா ராஜ் கதாநாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் முனிஷ்காந்த், காளி வெங்கட், சசி செல்வராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இந்நிலையில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இந்த படப்பிடிப்பு நிறைவுபெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடி உள்ளனர்.