உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / அபி நவ்யா - தீபக் சொன்ன ஹேப்பி நியூஸ்

அபி நவ்யா - தீபக் சொன்ன ஹேப்பி நியூஸ்

சின்னத்திரை நடிகை மற்றும் செய்திவாசிப்பாளரான அபிநவ்யா, சின்னத்திரை நடிகர் தீபக்கை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அபி நவ்யா கயல் தொடரில் ஆனந்தி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். சமீபகாலமாக அபிநவ்யாவை சீரியலில் பார்க்க முடியவில்லை. அதற்கான உண்மை காரணம் இப்போது தெரியவந்துள்ளது. அபிநவ்யா தற்போது கர்ப்பமாக இருக்கிறார். இந்த மகிழ்ச்சியான செய்தியை தெரிவித்துள்ள அபிநவ்யா, தீபக்குடன் சேர்ந்து எடுத்துக்கொண்ட சில புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனையடுத்து பலரும் தீபக் அபிநவ்யா ஜோடிக்கு நல்லபடியாக குழந்தை பிறக்க வேண்டும் என வாழ்த்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !