பாண்டியன் ஸ்டோர்ஸ் கதிருடன் கீர்த்தி சுரேஷ் : வைரலாகும் புகைப்படம்
பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் கதிர் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் குமரன் தங்கராஜன். இன்ஸ்டாவில் எப்போதும் பாசிட்டிவான பதிவுகளை பதிவிட்டு வரும் குமரனுக்கு ரசிகர்கள் அதிகம். பலரும் அவரை சினிமாவுக்கு முயற்சி செய்ய சொல்லி மோட்டிவேட்டும் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், சின்னத்திரை நடிகரான குமரன், சினிமா நடிகை கீர்த்தி சுரேஷூடன் நிற்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதைபார்த்து பலரும், ரசிகர்கள் குமரன் உண்மையாகவே சினிமாவுக்கு போய்விட்டாரா? என கேட்டு வருகின்றனர். மேலும், அந்த பதிவில் 'நீண்ட நாட்களுக்கு பின் உன்னை சந்திப்பதில் மகிழ்ச்சி. நாம் அப்படியே தான் இருக்கிறோம். இன்னும் இளமையாகவும் அழகாகவும்' என கேப்ஷனிட்டு கீர்த்தி சுரேஷூக்கு பிறந்தநாள் வாழ்த்துகளும் கூறியுள்ளார். எனவே, இவர்கள் முன்னரே நண்பர்களா? இதற்கு முன் சேர்ந்து நடித்துள்ளார்களா? என குமரனின் கமெண்ட் பாக்ஸில் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.