உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ‛பிரம்மாஸ்திரா 2' படத்தில் ‛கேஜிஎப்' நாயகன் யஷ்

‛பிரம்மாஸ்திரா 2' படத்தில் ‛கேஜிஎப்' நாயகன் யஷ்

பிரசாந்த் நீல் இயக்கத்தில் கன்னடத்தில் உருவான ‛கேஜிஎப்' படத்தின் இரண்டு பாகங்களிலும் நடித்து பிரபலமானவர் யஷ். அதோடு கேஜிஎப் படத்தின் இரண்டாம் பாகத்தின் வெற்றிக்கு பிறகு வட இந்தியாவிலும் நன்கு அறியப்படும் நடிகராகிவிட்டார் யஷ். இதன் காரணமாக ஹிந்தியில் ரன்பீர் கபூர், ஆலியா பட் மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடிக்க இருக்கும் பிரம்மாஸ்திரா-2 படத்தில் தற்போது கன்னட நடிகர் யஷை முக்கிய வேடத்தில் நடிக்க வைப்பதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. யஷ் இந்த படத்தில் நடித்தால் தென்னிந்தியாவில் இந்த படத்தை மிகப்பெரிய அளவில் வியாபார செய்யலாம் என்பதால் இதுவரை அவர் வாங்கியதை விட கூடுதலான சம்பளத்தை கொடுத்து ஒப்பந்தம் செய்ய இருப்பதாகவும் பாலிவுட்டில் தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் பிரம்மாஸ்த்திரா படத்தின் முதல் பாகத்தில் அமிதாப்பச்சன், ரன்பீர் கபூர், ஆலியா பட், மௌனி ராய் , நாகார்ஜுனா ஆகியோர் நடித்திருந்தனர். இப்படம் கடந்த செப்டம்பர் 9ஆம் தேதி திரைக்கு வந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !