உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ரசிகர் வரைந்த ஓவியத்தை டிபி-யாக வைத்த விஜய்

ரசிகர் வரைந்த ஓவியத்தை டிபி-யாக வைத்த விஜய்

இந்த ஆண்டு பொங்கலுக்கு விஜய்யின் வாரிசு மற்றும் அஜித்தின் துணிவு படங்கள் திரைக்கு வர இருப்பதால் இருவரின் ரசிகர்களும் சோசியல் மீடியாவில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்கள். இந்த நிலையில் தனது படங்கள் திரைக்கு வரும்போது டுவிட்டரில் அப்படம் குறித்த அப்டேட்களை வெளியிட்டு வரும் விஜய், தற்போது வாரிசு படம் குறித்து அப்டேட்களை வெளியிட்ட தொடங்கி இருக்கிறார். டுவிட்டரில் 4 மில்லியன் பாலோயர்களை கொண்டுள்ள விஜய், நேற்றைய தினம் இலங்கையைச் சேர்ந்த தனது ரசிகர் கஜேந்திரன் என்பவர் வரைந்த தனது ஓவியத்தை டுவிட்டர் பக்கத்தில் டிபியாக வைத்துள்ளார். இதற்கு விஜய் ரசிகர்கள் அமோக வரவேற்பு கொடுத்து வருகிறார்கள்.

இதனிடையே வாரிசு படத்தை அடுத்து விஜய் மீண்டும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளார். இதன் படப்பிடிப்பு டிசம்பர் மாதம் மூணாறில் தொடங்க இருப்பதாக இன்னொரு புதிய அப்டேட்டும் வெளியாகி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !