உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / துணிவு இல்லை என்றால் பெருமை இல்லை : ஜிப்ரான்

துணிவு இல்லை என்றால் பெருமை இல்லை : ஜிப்ரான்

வினோத் இயக்கத்தில் அஜித், மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி உட்பட பலர் நடித்துள்ள படம் துணிவு. போனி கபூர் தயாரித்துள்ள இந்த படம் பொங்கலுக்கு திரைக்கு வருகிறது. உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் இந்த படத்தை வெளியிடுகிறது. துணிவு படத்தின் இசையமைப்பாளர் ஜிப்ரான் ஒரு பதிவு போட்டிருக்கிறார். அதில், உங்களுடைய இலக்கை நோக்கி நீங்கள் ஓடும்போது உன்னால் முடியாது என யார் தடுத்தாலும் அனைத்தையும் தாண்டி ஓட வேண்டும் என்றால் உங்களுக்கு துணிவு முக்கியம் என்று கூறுவது போன்று ஒரு கார்ட்டூன் புகைப்படத்தை பதிவிட்டு இருக்கிறார். அதோடு துணிவு இல்லை என்றால் பெருமை இல்லை என்ற ஒரு வாசகத்தையும் பதிவிட்டுள்ளார். இதை அஜித் ரசிகர்கள் வைரலாக்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !