விஜய்-67 வது படத்தில் நிவின் பாலி?
ADDED : 1075 days ago
மாஸ்டர் படத்தை அடுத்து மீண்டும் விஜய் நடிக்கும் 67வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கப் போகிறார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக திரிஷா நடித்திருப்பதாக ஒரு தகவல் வெளியாகிக் கொண்டிருக்கிறது. மேலும், கேங்ஸ்டர் கதையில் உருவாகும் இந்த ஆக்சன் படத்தில் விஜய்யுடன் மோதும் வில்லன்களாக அர்ஜுன், சஞ்சய் தத் ,பிரகாஷ்ராஜ், பிரித்விராஜ் ஆகியோர் நடிப்பதாக கூறப்பட்ட நிலையில் தற்போது பிரித்விராஜ் கால்சீட் பிரச்னை காரணமாக விஜய்- 67வது படத்திலிருந்து விலகி விட்டதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது.
இதன் காரணமாக அவருக்கு பதிலாக இன்னொரு மலையாள நடிகரான நிவின் பாலியை இப்படத்தில் நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. பிரேமம் படத்தின் மூலம் பெரிய அளவில் பிரபலமான நிவின் பாலி, தமிழில் நேரம் படத்தில் நாயகனாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.