அம்மாவான சந்திரா லக்ஷ்மணனுக்கு குவியும் வாழ்த்துகள்
ADDED : 1073 days ago
விஜய் டிவியில் ஒளிபரப்பான 'காதலிக்க நேரமில்லை' சீரியல் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் சந்திரா லக்ஷமண். தமிழில் சில படங்களிலும் நடித்துள்ளார். இவருக்கு கடந்த ஆண்டு டோஷ் கிரிஷ்டோ என்பவருடன் திருமணம் நடந்தது. சில மாதங்களுக்கு தான் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்திருந்த சந்திராவுக்கு தற்போது அழகிய ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்த மகிழ்ச்சியான செய்தியை பகிர்ந்துள்ள சந்திரா குழந்தையின் பிஞ்சு கால்களின் புகைப்படத்தை வெளியிட்டு 'எங்களுக்காகவும் எங்கள் குழந்தைக்காகவும் பிரார்த்தனை செய்த அணைவருக்கும் நன்றி' என நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார். கிட்டத்தட்ட 40 வயதில் முதல் குழந்தையை பெற்றெடுத்து தாயான சந்திராவுக்கு பல தரப்பினரும் வாழ்த்துகள் கூறி வருகின்றனர்.