தெலுங்கு பிக்பாஸ் : நாகார்ஜுனாவுக்கு கோர்ட் நோட்டீஸ்
ADDED : 1069 days ago
தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதனை கமல் தொகுத்து வழங்குகிறார். இதேபோன்று தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியை நாகார்ஜுனா தொகுத்து வழங்கி வருகிறார். அங்கு 6வது சீசனாக பிக்பாஸ் தமிழுக்கு முன்பே துவங்கி ஒளிபரப்பாகி வருகிறது.
இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சி சமூக சீர்கேட்டுக்கு காரணமாக இருக்கிறது. இளைஞர்களை தவறாக வழிநடத்துகிறது. இதனால் இந்த நிகழ்ச்சியை நிறுத்த வேண்டும் என்று ஐதராபாத் உயர்நீதி மன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் நாகார்ஜுனா, நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள், ஒளிபரப்பாளர்கள் மற்றும் மத்திய மாநில அரசுகள் விளக்கம் அளிக்குமாறு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது. இது சின்னத்திரை வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.