உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'ரணபலி' ஆக விஜய் தேவரகொண்டா

'ரணபலி' ஆக விஜய் தேவரகொண்டா

தெலுங்கில் ராகுல் சங்கிரித்யன் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா அவரது 14வது படமாக புதிய படத்தில் நடித்து வருகிறார். நேற்று குடியரசு தினத்தை முன்னிட்டு இந்த படத்திற்கு 'ரணபலி' என தலைப்பு வைத்துள்ளதாக முதல் பார்வை மற்றும் அறிமுக வீடியோ உடன் அறிவித்துள்ளனர். இதை மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் டி சீரியஸ் என இரு நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றனர். இதன் படப்பிடிப்பு சில மாதங்களாக நடைபெற்று வருகிறது.

இது பீரியட் டிராமா ஜானரில் உருவாகிறது. இந்த அறிமுக வீடியோவின் படி பார்த்தால், இப்படம் 1876ம் ஆண்டு காலகட்டத்தில் மெட்ராஸ் பிரசிடென்சியில் ஆங்கிலேயர் ஆட்சி காலகட்டத்தில் தென்னிந்தியாவில் அவர்கள், இந்தியர்களின் நிலத்தை கைப்பற்றியது என பல விஷயங்கள் குறித்து பேசுவது போல் தெரிகிறது. மேலும், இப்படத்தை 'தி கர்ஸ்ட் லேண்ட் சப்த பூமி' என்கிற நாவலை தழுவி உருவாக்கியுள்ளதாக கூறப்படுகிறது .

இதில் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். தி மம்மி படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமான அர்னால்ட் வோஸ்லு ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். வருகிற செப்டம்பர் 11ம் தேதியன்று 5 மொழிகளில் திரைக்கு வருகிறது என குறிப்பிட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !