மீண்டும் படம் இயக்கும் ‛தினந்தோறும்' நாகராஜ்
ADDED : 1065 days ago
1998ல் முரளி - சுவலட்சுமி நடித்த படம் ‛தினந்தோறும்'. அப்போது வரவேற்பை பெற்ற இந்த படத்தை நாகராஜ் இயக்கி இருந்தார். இந்த படத்திற்கு பின் ‛தினந்தோறும்' நாகராஜ் என அழைக்கப்பட்டார். ஆனால் என்னசெய்வது காலத்தின் வெள்ளத்தில் நாகராஜ் திசை மாற, தொடர்ந்து படங்கள் இயக்க முடியாமல் போனது.
பின் கவுதம் மேனன் இயக்கிய மின்னலே, காக்க காக்க படங்களுக்கு வசனம் எழுதிய நாகராஜ், 2013 ஆண்டு 'மத்தாப்பு' என்ற படத்தை இயக்கினார். இந்நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒரு படத்தை இயக்குகிறார். பெயரிடப்படாத இந்த படத்தை ‛Q' சினிமாஸ் என்ற நிறுவனம் தயாரிக்கிறது. சத்யா இசையமைக்கிறார். மற்ற நடிகர், நடிகைகள் தேர்வு நடைபெறுகிறது. ஜனவரியில் படப்பிடிப்பு துவங்க இருக்கிறது.