விஜய் பாடிய ‛ரஞ்சிதமே....' : வாரிசு முதல் பாடல் நவ.,5ல் வெளியாகிறது
ADDED : 1081 days ago
‛பீஸ்ட்' படத்திற்கு பின் விஜய் நடிப்பில் வெளியாக உள்ள படம் ‛வாரிசு'. தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்க, ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடித்துள்ளார். சரத்குமார், பிரபு, சம்யுக்தா, சங்கீதா, யோகி பாபு உள்ளிட்ட ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். தமன் இசையமைத்துள்ளார்.
படப்பிடிப்பு முடிந்து மற்ற பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. சமீபத்தில் இந்த படத்தின் ஸ்டில்கள் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றன. அதோடு படம் பொங்கலுக்கு வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் வாரிசு படத்தின் முதல் பாடல் நவ., 5ல் வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ‛ரஞ்சிதமே....' என தொடங்கும் இந்த பாடலை விவேக் எழுத, நடிகர் விஜய்யே பாடி உள்ளார். இதற்கான புரொமோ வீடியோ இன்று(நவ., 3) வெளியாகி உள்ளது.