மேலும் செய்திகள்
பெற்றோருக்கு தெரியாமல் ஹாரர் படங்கள் பார்ப்பேன்: அனுபமா
1036 days ago
செப்டம்பர் 12ல் நெட்பிளிக்சில் வெளியாகும் சாயாரா!
1036 days ago
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா, தசை அழற்சி நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக சமீபத்தில் வெளிப்படையாக அறிவித்திருந்தார். அவர் விரைவில் நலமடைய பல சினிமா பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
தன் சக நடிகர் நாக சைதன்யாவைக் காதலித்து திருமணம் செய்து கொண்டு பிரிந்தவர் சமந்தா. பிரிவுக்குப் பின் அந்த ஜோடி தங்களது திருமண வாழ்க்கைப் பிரிவைப் பற்றி அதிகம் பேசிக் கொண்டதில்லை. இந்நிலையில் உடல் நலம் பாதிக்கப்பட்டிருக்கும் சமந்தா விரைவில் குணமடைய அவரது மைத்துனர் நடிகர் அகில் அப்போதே சமந்தாவின் பதிவில் கமெண்ட் போட்டிருந்தார்.
அவரை அடுத்து அகிலின் அண்ணன் நாக சைதன்யா, அப்பா நாகர்ஜுனா இருவரும் சமூக வலைத்தளங்களில் ஏதாவது பதிவிடுவார்கள் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தார்கள். அதன்பின் நாக சைதன்யா, நாகார்ஜுனா இருவரும் சமந்தாவை நேரில் சந்திக்க உள்ளதாகவும் செய்திகள் வெளிவந்தது.
ஆனால், இருவரும் பிஸியாக நடித்துக் கொண்டிருப்பதால் சமந்தாவை நேரில் சந்திக்கச் செல்லவில்லை என்று தகவல் வெளியாகி உள்ளது. இருப்பினும் நாக சைதன்யா, சமந்தாவை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு விசாரித்துள்ளதாக டோலிவுட்டில் ஒரு தகவல் பரவியுள்ளது. என்ன உதவி வேண்டுமானாலும் செய்யத் தயார் என நாக சைதன்யா சொன்னதாகவும் சொல்கிறார்கள்.
1036 days ago
1036 days ago