‛கலகத் தலைவன்' நவ., 18ல் ரிலீஸ்
ADDED : 1064 days ago
மகிழ்திருமேனி இயக்கத்தில் கலகத் தலைவன் மற்றும் மாரி செல்வராஜ் இயக்கத்தில் மாமன்னன் போன்ற படங்களில் நடித்திருக்கிறார் உதயநிதி ஸ்டாலின். இதில் மகிழ்திருமேனி இயக்கத்தில் நடித்துள்ள கலகத் தலைவன் படத்தின் இறுதிக் கட்டப்பணிகள் முடிவடைந்து விட்ட நிலையில் தற்போது அப்படம் வருகிற நவம்பர் 18ம் தேதி திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தை தமிழகம் முழுவதும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடுகிறது. மேலும் இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நவம்பர் 10ம் தேதியான நாளை மாலை 6.30 மணிக்கு சென்னையில் நடைபெறுகிறது. இப்படத்திற்கு அரோள் கரோலி இசையமைத்துள்ளார்.