உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சென்னை காளிகாம்பாள் கோவிலில் சாமி தரிசனம் செய்த ஹன்சிகா!

சென்னை காளிகாம்பாள் கோவிலில் சாமி தரிசனம் செய்த ஹன்சிகா!

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என இதுவரை 50 படங்களுக்கு மேல் நடித்துள்ளார் ஹன்சிகா. தற்போது தமிழில் மூன்று படங்களில் நடித்து வருகிறார். அவர் நடித்துள்ள கார்டியன் என்ற திகில் படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. இந்த நிலையில் ஆர் .கண்ணன் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் தற்போது நடிக்கப் போகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கும் நிலையில், நேற்று சென்னையில் உள்ள காளிகாம்பாள் கோவிலில் ஹன்சிகா மற்றும் இயக்குனர் ஆர். கண்ணன் ஆகியோர் சாமி தரிசனம் செய்துள்ளனர்.

மேலும் சோஹல் கதூரியா என்ற தனது நண்பரான பிசினஸ் பார்ட்னரை டிசம்பர் நான்காம் தேதி திருமணம் செய்து கொள்ள இருக்கிறார் ஹன்சிகா. அதனால் திருமண வேலைகள் தடபுடலாக நடைபெற்று வருகிறது. ஆனால் இந்த நிலையிலும் தற்போது அவர் புதிய படங்களில் அடுத்தடுத்து கமிட் ஆகி வருவதைப் பார்க்கையில் திருமணத்திற்கு பிறகும் பிரேக் கொடுக்காமல் தொடர்ந்து ஹன்சிகா சினிமாவில் நடிப்பார் என்பது தெரிகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !