மலையாள ஒளிப்பதிவாளர் சுதீஷ் பப்பு திடீர் மரணம்
ADDED : 1057 days ago
மலையாள சினிமாவில் செல்லமாக பப்பு என்று அழைக்கப்பட்டவர் ஒளிப்பதிவாளர் சுதீஷ் பப்பு. துல்கர் சல்மான் நடித்த செகண்ட் ஷோ படத்தின் மூலம் ஒளிப்பதிவாளரான பப்பு அதன்பிறகு கூதரா, ரோஸ் கிடாரினால், ஈடா, நான் ஸ்டீவ் லோபஸ். உள்பட முக்கியமான படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தார். கடைசியாக மஜூ இயக்கி, சன்னி வெய்ன் நடித்த 'அப்பன்' படத்திற்கு ஒளிப்பதிவு செய்தார்.
44 வயதே ஆன பப்பு அமிலாய்டோசிஸ் என்ற அரிய நோயால் பாதிக்கப்பட்டார். தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பப்பு நேற்று திடீரென மரணம் அடைந்தார். பப்புவின் மரணம் மலையாள திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திரையுலக பிரமுகர்கள் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.