சிவகார்த்திகேயன் படத்தில் ஹாலிவுட் கலைஞர்
ADDED : 1095 days ago
ஹாலிவுட்டின் பிரபல சண்டை இயக்குனர் யானிக் பென். கடந்த சில ஆண்டுகளாக இவர் இந்திய படங்களில் குறிப்பாக தென்னிந்திய படங்களில் அதிகம் பணியாற்றி வருகிறார். தமிழில் துருவ நட்சத்திரம், வெந்து தணிந்தது காடு போன்ற படங்களில் பணியாற்றினார். அடுத்து மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் மாவீரன் படத்திலும் சண்டை இயக்குனராக பணியாற்றுகிறார். இதற்கான அறிவிப்பை படக்குழுவினர் வீடியோ மூலம் வெளியிட்டுள்ளனர். மாவீரன் படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடந்து வருகிறது. சிவகார்த்திகேயன் உடன் மிஷ்கின் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இதில் நாயகியாக ஷங்கரின் மகள் அதிதி நடிக்கிறார். கிட்டத்தட்ட 40 சதவீத படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. தொடர்ந்து படப்பிடிப்பு வேகமாக நடந்து வருகிறது.