ஒரே ஸ்டுடியோவில் நடைபெறும் ரஜினி, அஜித் படங்களின் படப்பிடிப்பு
ADDED : 1048 days ago
எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உள்ள திரைப்படம் 'துணிவு'. வங்கி கொள்ளை தொடர்பான கதையில் இந்த படம் தயாராகிறது. போனி கபூர் தயாரிக்க, பொங்கலுக்கு படம் வெளியாக உள்ளது. தற்போது இப்படத்தின் 'சில்லா சில்லா' எனும் பாடல் படப்பிடிப்பு காட்சி சென்னையில் உள்ள பிரபல ஸ்டுடியோவில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் அதே ஸ்டுடியோவில் நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ‛ஜெயிலர்' படத்தின் படப்பிடிப்பும் நடைபெற்று வருகிறது. ஒரே ஸ்டுடியோவில் படப்பிடிப்பு நடைபெறுவதால் ரஜினியும், அஜித்தும் சிந்திப்பார்களா? இருவரும் புகைப்படம் எடுத்துக் கொள்வார்களா என ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.