மருத்துவமனையிலிருந்து கமல் 'டிஸ்சார்ஜ்'
ADDED : 1048 days ago
சென்னை : உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் கமல்ஹாசன் இன்று(நவ., 25) வீடு திரும்பினார். நடிகர் கமல்ஹாசன் தற்போது இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். அதோடு டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.
நேற்று முன்தினம் மாலை உடல்நிலை பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துமனையில் கமல் அனுமதிக்கப் பட்டார். அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். 'லேசான காய்ச்சல், இருமல் சளி ஆகியவற்றால் கமல் பாதிக்கப்பட்டதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது.
இந்நிலையில் அவரது உடல்நிலை தேறியதை அடுத்து இன்று காலை டிஸ்ஜார்ஜ் செய்யப்பட்டார். ஓரிரு நாட்கள் ஓய்வெடுக்க உள்ள கமல் இடையில் பிக்பாஸ் படப்பிடிப்பில் பங்கேற்றுவிட்டு விரைவில் இந்தியன் 2 படப்பிடிப்பில் பங்கேற்க உள்ளார்.