நடன பள்ளி தொடங்கிய நவ்யா நாயர்
ADDED : 1044 days ago
அடிப்படையில் பரநாட்டிய கலைஞரான நவ்யா நாயர், 'இஷ்டம்' என்ற மலையாள படத்தின் மூலம் நடிகை ஆனார். அதன் பிறகு ஏராளமான மலையாள படத்தில் நடித்த அவர் அழகிய தீயே படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அதன்பிறகு சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி, பாசக்கிளிகள், அமிர்தம், மாய கண்ணாடி, ராமன் தேடிய சீதை உள்பட பல படங்களில் நடித்துள்ளார்.
கடந்த 2010ம் சந்தோஷ் மேனன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு சாய்கிருஷ்ணா என்ற மகன் இருக்கிறார். திருமணத்துக்கு பிறகு சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்த நவ்யா இப்போது மீண்டும் நடிக்கத் தொடங்கியுள்ளார். அதோடு கேரள மாநிலம் கொச்சியில் மாதங்கி என்ற பெயரில் நடனப் பள்ளியை தொடங்கி உள்ளார். நவ்யா சினிமாவில் நடிப்பதை குறைத்திருந்தாலும் தொடர்ந்து நடன நிகழ்ச்சிகளை நடத்தி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.