சசிகுமாருடன் நந்தன் படக்குழுவினர் சபரிமலை பயணம்
ADDED : 1027 days ago
சசிகுமார் நடித்து வரும் படம் நந்தன். இதனை இரா.சரவணன் இயக்குகிறார். இந்த படத்தில் சசிகுமார் இதுவரை நடிக்காத வித்தியாசமான கேரக்டரில் நடித்துள்ளார். இந்த படத்தை அவர் மிகவும் எதிர்பார்க்கிறார்.
இந்த படத்தில் அவர் நடிக்கும்போதே சபரிமலைக்கு மாலை அணிந்து விரதம் இருந்து நடித்தார். இந்த நிலையில் நந்தன் படக் குழுவினருடன் சபரிமலைக்கு இருமுடி கட்டி சென்றுள்ளார். மதுரையில் இருந்து சாதாரண பக்தர்களுடன் அவர் வேனில் பயணம் செய்து பம்பை சென்று அங்கிருந்து சபரிமலை செல்கிறார். அவருடன் அவருடன் நந்தன் பட டைரக்டர் இரா.சரவணன் சென்றுள்ளார்.