சேரன் பட பாடலை வெளியிட்ட துப்புரவு பணியாளர்கள்
ADDED : 1031 days ago
தமிழ் சினிமாவில் பாடல் வெளியீட்டு விழாக்கள் விதவிதமாக நடக்கிறது. பிரிவியூ தியேட்டர்கள், பெரிய தியேட்டர்கள், மால்கள், நட்சத்திர ஓட்டல்கள், பொது மைதானங்கள் என விதவிதமான இடத்தில் நடக்கிறது. சேரன் நடித்துள்ள 'தமிழ்குடிமகன்' என்ற படத்தின் பாடலை துப்புரவு தொழிலாளர்கள் வெளியிட்டுள்ளனர். துப்புரவு தொழிலாளர்கள் இருக்கும் இடத்திற்கே சென்று பாடலை வெளியிட வைத்துள்ளார் சேரன்.
தமிழ்க்குடிமகன் படத்தை இசக்கி கார்வண்ணன் இயக்குகிறார். இதில் சேரனுடன் ஸ்ரீபிரியங்கா, லால், தீபா, வேல ராமமூர்த்தி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ராஜேஷ் யாதவ் ஒளிப்பதிவு செய்ய, சாம் சிஎஸ் இசையமைக்கிறார். இப்படத்தை லக்ஷ்மி கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.