சன்னி லியோன் படத்திற்கு யுஏ சான்று
ADDED : 1021 days ago
சன்னி லியோன், சதீஷ், தர்ஷா குப்தா, யோகி பாபு உட்பட பலரது நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‛ஓ மை கோஸ்ட்'. இந்த படத்தை சிந்தனை செய் என்ற படத்தை இயக்கிய யுவன் இயக்கி இருக்கிறார். இதில் சன்னி லியோன் அராஜகம் செய்யும் ராணி மற்றும் பேய் என இரண்டு விதமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். இப்படத்தின் டீசர், டிரைலர் ஏற்கனவே வெளியான நிலையில் வருகிற 30-ஆம் தேதி இப்படம் திரைக்கு வருகிறது. இந்த நிலையில் தற்போது இப்படத்திற்கு சென்சார் போர்டு யுஏ சான்றிதழ் வழங்கியிருப்பதாக அப்படக்குழு அறிவித்துள்ளது. பொதுவாக சன்னி லியோன் நடித்த படங்களுக்கு ஏ சான்றிதழ்களே வழங்கப்பட்டு வந்துள்ள நிலையில் இந்த படத்திற்கு யு ஏ சான்றிதழ் வழங்கப்பட்டிருப்பது ஆச்சரியமாக பார்க்கப்படுகிறது.