நடிப்புக்கு சமந்தா நீண்டகால ஓய்வு
ADDED : 1019 days ago
சமீபத்தில், சமந்தா நடித்த 'யசோதா' படம், ஐந்து மொழிகளில் வெளியானது. அடுத்து, 'சாகுந்தலம்' படம் வெளியாக உள்ளது. விஜய் தேவரகொண்டாவுடன், 'குஷி' என்ற படத்திலும் சமந்தா நடித்து வருகிறார். இதனிடையே, 'மயோசிடிஸ்' என்ற அரிய வகை தசை அழற்சி நோயால் பாதிக்கப்பட்டு உள்ள சமந்தா, 'யசோதா' பட 'டப்பிங்'கின் போதே சிகிச்சை பெறத் துவங்கினார். தொடர் சிகிச்சையில் சமந்தா தேறி வந்தாலும், படப்பிடிப்பில் பங்கேற்காமல் இருந்தார்.
இந்நிலையில், நோயின் தீவிரத்தைத் தொடர்ந்து, மருத்துவர்களின் ஆலோசனைப்படி, உயர்ரக சிகிச்சைக்காக சமந்தா, தென்கொரியா நாட்டிற்கு செல்ல திட்டமிட்டு உள்ளார். இதனால், நடிப்புக்கு நீண்ட காலம் ஓய்வு கொடுக்க, சமந்தா திட்டமிட்டு உள்ளதாகவும், இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும், சினிமா வட்டாரத்தில் கூறப்படுகிறது.