ரஜினியின் 171வது படம்- புதிய அப்டேட் வெளியானது!
ADDED : 1018 days ago
அண்ணாத்த படத்தை அடுத்து நெல்சன் இயக்கும் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த். இந்த படத்தில் படையப்பாவுக்கு பிறகு மீண்டும் ரஜினியுடன் இணைந்து இருக்கிறார் ரம்யா கிருஷ்ணன். இந்த படத்தை அடுத்து லைகா நிறுவனம் தயாரிக்கும் இரண்டு படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆகி இருக்கிறார் ரஜினிகாந்த்.
அதில் ஒரு படத்தை டான் படத்தை இயக்கிய சிபி சக்கரவர்த்தி இயக்குவதாகவும், இன்னொரு படத்தை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்குவதாகவும் செய்திகள் வெளியாகின. ஆனால் தற்போது சிபி சக்ரவர்த்தி சொன்ன கதை ரஜினிக்கு திருப்தி அளிக்காததால் ரஜினியின் 171வது படத்தை கோமாளி, லவ் டுடே படங்களை இயக்கிய பிரதீப் ரங்கநாதன் இயக்குவதாக கூறப்படுகிறது. இது குறித்து பேச்சுவார்த்தை தற்போது நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.