மேலும் செய்திகள்
தமிழ் புத்தாண்டு தினத்தில் சூர்யாவுடன் மோதும் விஷால்!
1009 days ago
நெல் விவசாயத்தில் இறங்கிய நயன்தாரா பட இயக்குனர்
1009 days ago
பிக்பாஸ் வீட்டில் ஜி.பி.முத்துவுடன் சண்டை போட்டதன் காரணமாக மக்களின் கடுமையான எதிர்ப்பை சந்தித்தார் தனலெட்சுமி. இருப்பினும் அடுத்தடுத்த வாரங்களில் தன்னை திருத்திக் கொண்டு நன்றாக விளையாடி வந்தார். கடந்த வார எலிமினேஷனில் தனலெட்சுமி யாரும் எதிர்பாரத வகையில் வெளியேற்றப்பட்டதால் பிக்பாஸ் ரசிகர்கள் அப்செட்டாகியுள்ளனர். நாமினேஷனில் இடம்பெற்ற கதிரவன், ரட்சிதா, மைனா ஆகியோர் ஆரம்பத்திலிருந்தே சேப் கேம் விளையாடி தப்பித்து வந்ததால் அவர்களில் யாராவது ஒருவர் தான் எலிமினேட் செய்யப்படுவார்கள் என்று ரசிகர்கள் நினைத்தனர். ஆனால், முற்றிலும் மாறாக நன்றாக விளையாடி வந்த தனலெட்சுமி வெளியேற்றப்பட்டதை தெரிந்து கொண்ட ரசிகர்கள் ஞாயிற்றுக்கிழமை காலை முதலே தனலெட்சுமிக்கு ஆதரவாக சோஷியல் மீடியாவில் கருத்து தெரிவித்து வந்தனர். சேவ் தனா ஹேஷ்டேக்கும் டிரெண்ட்டானது. இருப்பினும் இறுதியில் தனலெட்சுமி எலிமினேட் செய்யப்பட்டதால் பிக்பாஸ் நேர்மையற்ற முறையில் நடந்து கொண்டதாகவும், தப்பான கேம் பற்றி பேசும் கமல்ஹாசனே இப்படி தப்பான எலிமினேஷனை செய்யலாமா? என்றும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
1009 days ago
1009 days ago